சுசாந்தா நந்தா என்ற இந்திய வனத்துறை அதிகாரி தனது டுவிட்டர் பக்கத்தில் அடிக்கடி சுவாரசியமான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், அவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisment
Advertisment

நீண்ட நாட்களாக சந்திக்காத அண்ணன், தம்பியான இரண்டு பபூன் வகை குரங்குகள் ஓராண்டுக்கு பிறகு சந்தித்த போது ஒன்றை ஒன்று கட்டி தழுவிக்கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றாக பிறந்த அந்த கருங்குரங்குகள் வெவ்வேறு வனசரகங்களில் வளர்க்கப்பட்டு வந்தன. தற்போது இரண்டு குரங்களும் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்தாலும் மனிதனை போல பழைய சம்பவங்களை நினைவில் கொண்டு தங்களுடைய பாசத்தை வெளிப்படுத்தியுள்ளது.