கரோனா வைரஸ் இந்தியா உட்பட உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் சூழலில், கேரளாவில் குரங்கு காய்ச்சலால் ஒருவர் பலியாகியுள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
கேரளாவில் கரோனா காரணமாக 14 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் பறவை காய்ச்சலும் பரவி வந்தது. இந்த இரண்டு நோய் பரவலும் அங்குள்ள மக்களை அச்சுறுத்தி வந்த சூழலில், கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் குரங்கு காய்ச்சல் தற்போது பரவத் தொடங்கியுள்ளது. இதுவரை 14 பேர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் மீனாட்சி என்கிறவர் இந்த காய்ச்சலால் பலியாகியுள்ளார். வயநாடு மாவட்டத்தில் உள்ள திருநெல்லி, குருக்கு மூலா, பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த காய்ச்சல் பரவியுள்ளது. இதனையடுத்து, இந்த காய்ச்சல் பரவுவதைத் தடுக்க நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மேலும், இதற்கான தடுப்பு ஊசி போடும் பணிகளும் அம்மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.