
ஏடிஎம் என்றாலே பணம் என்ற நிலையில் முதன் முதலாக தங்கம் வழங்கும் ஏடிஎம் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் முதல் தங்கம் வழங்கும் ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. கோல்டுசிக்கா என்ற ஒரு தனியார் நிறுவனம் இதற்கான தொழில் உதவிகளை வழங்கியுள்ளது. அங்கு வைக்கப்பட்டுள்ள ஏடிஎம் மையத்தில் டெபிட் கார்டுகள் மற்றும் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களுக்குத்தேவையான அளவிலான தங்க நாணயத்தை எடுக்கலாம்.அதில் 0.5 கிராம் முதல் 100 கிராம் வரை என எட்டு வகையான எடைகளைகொண்ட தங்க நாணயங்கள் மொத்தம் ஐந்து கிலோ அளவிற்கு ஏடிஎம்மில் வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் வாடிக்கையாளர்கள் தங்களுக்குத்தேவையான அளவில் தங்க நாணயங்களை எடுத்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)