Advertisment

சாலையில் சிதறிய பணம்;ஏடிஎம் கொள்ளை தொடர்பான வைரல் வீடியோ

atm

ஏடிஎம்ஐ உடைத்து 19 லட்சம் பணத்தைக்கொள்ளையடித்த திருடர்களை போலீசார் ஓட ஓட விரட்டிப் பிடிக்க முயன்ற நிலையில், ரூபாய்நோட்டுகள்சாலையில் சிதறடிக்கப்பட்டுகொள்ளையர்கள் தப்பிக்கும் வீடியோ காட்சிசமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

தெலுங்கானா மாநிலம் கோரன்ட்லாவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் சில மர்ம நபர்கள் முகமூடி அணிந்துகொண்டுகொள்ளையடிக்க முயன்றனர். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு வருவதை அறிந்த கொள்ளையர்கள்., கொள்ளையடிக்கப்பட்ட பணம் 19 லட்சம் ரூபாயை சிறு சிறு மூட்டைகளாக கட்டிக்கொண்டு காரில் ஏறி தப்பிக்க முயன்றனர். அப்பொழுது பதற்றத்தில் அவர்கள் கையில் இருந்த பண மூட்டை ஒன்று சாலையில் விழுந்தது. காரில் ஏறிக்கொண்டு மீண்டும்யூ டர்ன் எடுத்த பொழுது சாலையில் கிடந்த பணப்பையின் மீது திருடர்களின் கார் ஏறியதால் அந்த பையில் இருந்த நோட்டுகள்சிதறி விழுந்தது. இந்த வீடியோ காட்சிதற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

ATM police telangana
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe