Advertisment

"உலகில் இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியாக உள்ள நாடு இந்தியாதான்" -ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு...

mohan baghawat about indian muslims

Advertisment

உலகில் இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியாக உள்ள நாடு இந்தியாதான் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அளித்த பேட்டி ஒன்றில், "பெரும்பாலான முஸ்லிம்கள் இந்தியாவில் மட்டுமே உள்ளனர். ஒரு நாட்டின் மக்களை ஆட்சி செய்த ஒரு வெளிநாட்டு மதம் இன்னும் அங்கு உள்ளது என்பதற்கு உலகில் ஏதேனும் உதாரணம் இருக்கிறதா..?"எங்கும் இல்லை. இது இந்தியாவில் மட்டுமே உள்ளது. உலகில் இந்திய முஸ்லீம்கள் தான் சகல உரிமைகளுடன் மகிழ்ச்சியாக உள்ளனர். தங்களின் சுயத்துன்பம் காரணமாகவே சிலர் மதவெறி மற்றும் பிரிவினைவாதத்தைபரப்புகிறார்கள்.

உண்மை என்னவென்றால், இந்த நாட்டு மக்களின் மன உறுதியையும், மதிப்புகளையும் நசுக்குவதற்காககோயில்கள் அழிக்கப்பட்டன. அதனால்தான் கோவில்களைப் புனரமைக்க வேண்டும் என இந்து சமூகம் நீண்ட காலமாக விரும்பி வருகிறது. எங்கள் வாழ்க்கையைசிதைத்து, எங்கள் கோவிலை அழிப்பதன் மூலம் நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம். நாங்கள் அதை மீண்டும் கட்டியெழுப்ப விரும்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

Islam Mohan Bhagwat
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe