அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு வழங்கியுள்ளது.

mohan bagawath about ayodhya verdict

Advertisment

இந்த தீர்ப்பின்படி, வக்பு வாரியத்திற்கு அவர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் எனவும், வழக்குக்கு உட்படுத்தப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான அமைப்பை அடுத்த 3 மாதத்தில் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், "உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இந்த வழக்கு பல தசாப்தங்களாக நடந்து கொண்டிருந்தது, அது சரியான முடிவுக்கு வந்துள்ளது. இதனை யாரும் வெற்றி தோல்வியாக கருதப்படக்கூடாது. சமூகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுவதற்கான அனைவரின் முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

Advertisment