style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
ட்விட்டரில் அதிகமாக ஃபாலோவர்ஸ் வைத்திருக்கும் இந்தியர்களில் பிரதமர் மோடி தான் முதலிடத்தில் இருக்கிறார். தற்போது ட்விட்டர் நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கையால் இரண்டே நாளில் அவருடைய அக்கவுண்டில் இருந்து 2,70,000 ஃபாலோவர்ஸ் குறைந்துள்ளனர்.
11 ஜூலை அன்று நரேந்திர மோடியின் ட்விட்டர் கணக்கில் 43.37 மில்லியன் ஃபாலோவர்ஸ் இருந்தனர். தற்போது அது 43.1 மில்லியனாக இருக்கிறது. அதேபோல இந்திய பிரதமருக்கு என்று ட்விட்டரில் ஒரு கணக்கு இருக்கிறது. அதிலும் ஒரு லட்சம் பாலோவர்ஸ் குறைந்துள்ளனர்.
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">
உலகிலேயே பிரபலங்களின் சாய்ஸ்சாக சமூக வலைதளத்தில் இருப்பது ட்விட்டர் தான். அப்படிப்பட்ட ட்விட்டரில், பிரபலங்களின் பேரில் பல கள்ள அக்கவுண்ட்கள் செயல்படுகின்றன. ஆகையால், இந்த நிறுவனம் இதற்கு ஒரு நடவடிக்கை எடுக்கும் விதமாக கடந்த இரண்டு நாட்களில் ட்விட்டரில் செயல்படும் கள்ள அக்கவுண்ட்களை செயல் இழக்க செய்தது. அதனால், இந்தியாவின் பல பிரபலங்களின் ஃபாலோவர்ஸ் குறைந்திருக்கிறது. இந்தியாவில் இரண்டாவது அதிக ஃபாலோவர்ஸை கொண்ட அமிதாப் பச்சன், அவருடைய அக்கவுண்டில் இருந்து நான்கு லட்சம் ஃபாலோவர்ஸ் குறைந்துள்ளனர். இவர்களி போன்று ராகுல் காந்தி, சச்சின் டெண்டுல்கர், தீபிகா படுகோன், அமீர் கான் என்று பல பிரபலங்களின் ஃபாலோவர்ஸ் அதிக அளவில் குறைந்திருக்கிறது.