/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dsger.jpg)
இந்தியாவில்சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.. கடந்த 10 மாதங்களில் மட்டும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாய்க்கு மேல் உயர்ந்து உள்ளது.
இந்தநிலையில் சமையல் எரிவாயு சிலிண்டரைவாங்க முடியாததால், கிராமப்புறங்களில் உள்ள 42 சதவீதம் பேர் அதன் பயன்பாட்டை நிறுத்திவிட்டு விறகு அடுப்புகளைபயன்படுத்த தொடங்கிவிட்டனர் என ஆய்வு தெரிவிப்பதாக வெளியான செய்தியைதனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, மோடியின் வளர்ச்சி வாகனம் ரிவர்ஸ் கியரில் இயங்குகிறது என விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாகஅவர், "லட்சக்கணக்கான குடும்பங்கள் விறகடுப்பைபயன்படுத்தும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். வளர்ச்சி என்ற சொல்லிலிருந்து அவர்கள் வெகுதொலைவில் உள்ளனர்.மோடியின் வளர்ச்சி வாகனம் ரிவர்ஸ் கியரில் இயங்குகிறது. அதன் பிரேக்குகளும்பழுதாகிவிட்டன" என கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)