மகாராஷ்டிர மாநிலத்தின் 18ஆவது முதல்வராக, சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இன்று மாலை பொறுப்பேற்றார். மும்பை சிவாஜி பூங்காவில் நடைபெற்ற பிரமாண்டமான பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு சிவசேனா அழைப்பு விடுத்திருந்தது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
ஆனால், உத்தவ் தாக்கரேவின் பதவியேற்பு விழாவில் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றவில்லை. இந்த நிலையில், மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள உத்தவ் தாக்கரேவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் தமது வாழ்த்துச் செய்தியில், "மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள். மாநிலத்தின் வளர்ச்சிக்காக விடாமுயற்சியுடன் நீங்கள் பணியாற்றுவீர்கள் என நம்புகிறேன்" என பிரதமர் மோடி தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.