Advertisment

அவர்களின் பங்களிப்புகளால் தேசம் பெருமிதம் கொள்கிறது - ஒலிம்பிக் தினத்தில் பாராட்டிய பிரதமர் மோடி!  

narendra modi

சர்வதேச ஒலிம்பிக் தினம் ஆண்டுதோறும் ஜூன் 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க அதிகம் பேரை ஊக்கப்படுத்தவும், ஒலிம்பிக் போட்டிகளில் எத்தனை விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த சர்வதேச ஒலிம்பிக் தினம் கொண்டாடப்படுகிறது.

Advertisment

இந்நிலையில்சர்வதேச ஒலிம்பிக் தினத்தையொட்டி, இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றவர்களைப் பிரதமர் மோடி பாராட்டியுள்ளதோடு, விரைவில் தொடங்க இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒலிம்பிக் தினத்தில், இத்தனை வருடங்களில் ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய அனைவரையும் நான் பாராட்டுகிறேன். மற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் அவர்களின் பங்களிப்புகள் மற்றும் முயற்சிகள் குறித்து நமது தேசம் பெருமிதம் கொள்கிறது. சில வாரங்களில், டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு தொடங்குகிறது. நமது குழுவினருக்கு வாழ்த்துகள்" என கூறியுள்ளார்.

olympics 2020 Narendra Modi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe