Advertisment

மூன்றாவது முறையாக பிரதமராகும்' மோடி'-டெல்லியில் கட்டுப்பாடுகள் தீவிரம்

nn

இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இன்று பிரதமர் பதவியேற்பு மற்றும் அமைச்சரவை பதவியேற்பு விழா பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Advertisment

நாட்டின் பிரதமராக மூன்றாவது முறை நரேந்திர மோடி இன்று பதவியேற்கஇருக்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று இரவு 7:15 மணிக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. குடியரசு தலைவர் மாளிகையில் மோடி மற்றும்அமைச்சர்களுக்கு திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

Advertisment

இந்த விழாவில் வெளிநாட்டுத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்கும் தலைவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் விருந்தும் நடைபெற இருக்கிறது. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மாலத்தீவு அதிபர் முகமது மொய்சு, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மொரிஷியஸ் பிரதமர் பிரவீந்த் குமார், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், பூட்டான் பிரதமர் ஷரிங் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.நாட்டில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய நபர்கள் உள்ளிட்டோரும் இந்த விழாவில் பங்கேற்கின்றனர். விளையாட்டு, சினிமா பிரபலங்கள், மதத்தலைவர்கள், பத்ம விருது பெற்றவர்கள் விழாவில் கலந்து கொள்கின்றனர். 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், தொழிலாளர்கள், ஊழியர்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டுமானம், உத்தரகாண்ட் நிலச்சரிவு மீட்புப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.

பதவி ஏற்பு விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. டோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எல்லைகளில் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஐந்து கம்பெனி நாடாளுமன்ற பாதுகாப்புப் படையினர், என்.எஸ்.ஜி கமாண்டோக்கல் என பல அடுக்கு பாதுகாப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பல பகுதிகளில் இருந்து மத்திய டெல்லி செல்லும் பாதைகள் பொதுமக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜவஹர்லால் நேருக்கு பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகும் பெருமையை பெறுகிறார் மோடி.

President modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe