Advertisment

துப்புரவு தொழிலாளர்களின் காலை கழுவிய பிரதமர் மோடி...

ghjghjghj

Advertisment

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கோரக்பூரில் 2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சிக்கு பின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் கும்பமேளா நிகழ்ச்சிக்கு சென்று அங்கு புனித நீராடி வழிபாடு செய்தார். முக்கூடல் படித்துறையில் மகா ஆரத்தி வழிபாடு செய்து பிரதமர் மோடி பிரார்த்தனை மேற்கொண்டார். இதனையடுத்து கும்பமேளா இடத்தை சுத்தம் செய்யும் துப்புரவு தொழிலாளர்கள் சிலரது கால்களை கழுவி பிரதமர் மோடி அவர்களுக்கு பாத பூஜை செய்து மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடி பாத பூஜை செய்த இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக, பிரதமர் மோடியின் செயலை பாராட்டியும், தேர்தலுக்காக மோடி இவ்வாறு செய்கிறார் என எதிர்த்தும், கேலி செய்து மீம்களும் பகிரப்பட்டு வருகின்றன.

modi uttarpradesh
இதையும் படியுங்கள்
Subscribe