Advertisment

ஒரு மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்த பிரதமர் மோடி...

dfgdgg

டேராடூன் விமான நிலையத்திலிருந்து ருத்ராபூர் நகருக்கு ஹெலிகாப்டரில் செல்வதற்காக பிரதமர் மோடி விமான நிலையம் வந்த போது மோசமான வானிலை காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ருத்ராபூர் நகரில் பாஜக சார்பில் நடைபெறும் பேரணி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்ற பிரதமர் மோடி திட்டமிட்டிருந்தார். மேலும் அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களையும் தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் காலை முதல் டேராடூன் பகுதியில் தொடர்மழை பெய்து வந்ததால் ஹெலிகாப்டர் கிளம்ப முடியாத சூழல் உருவானது. இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விமான நிலையத்தில் காத்திருந்த பின்னர் ருத்ராபூர் கிளம்பி சென்றார்.

Advertisment

uttarakhand modi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe