/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/modi_28.jpg)
முன்னாள் பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய், நேற்று உடல்நல குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவரின் உடல் டெல்லியில் இருக்கும் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர், பாஜக தொண்டர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்துவதற்காக இராணுவ வாகனத்தில் பாஜக தலைமையகத்துக்கு வாஜ்பாயின் உடல் இன்று காலை எடுத்துச்செல்லப்பட்டது.
முன்னதாக பிரதமர் மோடி பாஜக தலைமையகத்துக்கு வந்து காத்திருந்தார். நேற்று எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாயின் உடல்நிலையை கேட்டு அறிய சென்றார். அவரது காலமானதை அடித்து நேற்று இரவே வாஜ்பாய் இல்லத்திற்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)