Skip to main content

மோர்பியில் விபத்துக்குள்ளானவர்களைக் காணச் செல்லும் மோடி; மருத்துவமனையைப் புதுப்பிக்கும் பணி தீவிரம்

Published on 01/11/2022 | Edited on 01/11/2022

 

Modi visits Morbi accident victims; Intensive renovation of the hospital

 

குஜராத் மாநிலம் மோர்பியில் சத்பூஜைக்காக ஆற்றைக் கடந்து கேபிள் பாலத்தில் மக்கள் சென்றபோது அறுந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது. ஆற்றில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

மேலும் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது. தேடுதல் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து மோர்பி தொங்கு பால விபத்தில் பாஜக எம்.பியான மோகன்பாய் கல்யாண்ஜியின் உறவினர்கள் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

 

மேலும் விபத்து குறித்து தன் வருத்தங்களைத் தெரிவித்த பிரதமர் மோடி, “நான் ஏக்தா நகரில் உள்ளேன். ஆனால் என் மனம் மோர்பி பாலத்தினால் பாதிக்கப்பட்டவர்களை நினைத்துக்கொண்டு உள்ளது. என் வாழ்க்கையில் இதுபோன்ற வலியை நான் அனுபவித்ததில்லை. ஒரு புறம் இதயம் முழுவதும் வலி நிறைந்துள்ளது. மறுபுறம் கடமையைச் செய்வதற்கானப் பாதை இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும் பாதுகாக்கவும் எவ்வித அலட்சியமும் காட்டப்படமாட்டாது என்பதை நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறேன்” எனக் கூறினார்.

 

விபத்து நடந்த பகுதியை நேரில் பார்வையிட உள்ளார் பிரதமர் மோடி. இதனைத் தொடர்ந்து விபத்தில் காயமடைந்தவர்கள் சேர்க்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கும் நேரில் சென்று காயம் அடைந்தவர்களைச் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளார்.  

 

இந்நிலையில் மோடி செல்ல இருக்கும் மருத்துவமனையைப் புதுப்பிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. சுவர்களுக்கு வர்ணம் பூசுவது, பழுதடைந்த பொருட்களைச் சரி செய்வது, தளங்களைச் சுத்தம் செய்வது போன்ற அனைத்துப் பணிகளும் இரவிலிருந்து அங்கு அசுர வேகத்தில் நடந்து வருகிறது. 

 

அவர்கள் பணி செய்யும் காட்சிகள் தொலைக்காட்சிகளில் வெளியானது. மருத்துவமனை புதுப்பிக்கப்படுவதற்கு ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், “விபத்தில் எண்ணற்ற மக்கள் உயிரிழந்து மாநிலமே சோகத்தில் இருக்கிறது. இவர்களோ ஏதோ விழாவிற்குத் தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள். வெட்கக்கேடு” என விமர்சித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடலில் சிக்கும் போதைப்பொருட்கள்; மீண்டும் மீண்டும் குஜராத்தில் பரபரப்பு 

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
narcotics at sea; Repeated agitation in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குஜராத்தின் அகமதாபாத்தில், நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக 7 பேர் கைதாகியுள்ளனர். நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

நேற்று குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே 602 கோடி ரூபாய் மதிப்புள்ள 86 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இதுவரை 14 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் குஜராத் கடல் பகுதியில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய கடலோர காவல் படை மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து அந்தப் பகுதியில் சோதனை நடத்தியதில் 173 கிலோ போதைப் பொருள் சிக்கியது. இந்திய மீன்பிடிப் படகில் இருந்த இரண்டு பேரை இது தொடர்பாக கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்படி தொடர்ச்சியாக குஜராத்தில் அதிகப்படியான போதைப் பொருட்கள் பிடிக்கப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.