/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Narendra_Modi_PTI-in_11.jpg)
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் தேசிய கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலுக்கான பிரச்சாரங்களும் நாடு முழுவதும் தொடங்க ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் வரும் மார்ச் 1 ஆம் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமாரி வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதனை தொடர்ந்து மார்ச் 6 ஆம் தேதி அவர் சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக, பாமக, பாஜக கூட்டணி தமிழகத்தில் உறுதியாகியுள்ள நிலையில், தேமுதிக உடன் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மோடியின் சென்னை வருகையின் போது இந்த கூட்டணி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படலாம் என அக்கூட்டணி தொண்டர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)