Modi thinks all power should be under him - Sonia Gandhi

Advertisment

எதிர்க்கட்சித் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காணொலி காட்சிமூலம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில், கரோனாதடுப்பு பணி, புலம்பெயர்தொழிலாளர்கள் பிரச்சனை,பொருளாதார மந்தநிலை குறித்துஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த கூட்டத்தில்,முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் டி ராஜா,சீதாராம் யெச்சூரி, விசிகதலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர்பங்கு பெற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, அனைத்து அதிகாரங்களும் தனக்கு கீழ் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி நினைக்கிறார். இந்தியாவின் ஒட்டுமொத்த அதிகார மையமாக பிரதமர் அலுவலகம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

அம்பன்புயல் பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என இந்த ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.