மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

modi tamilnadu visit postponed for loksabha election campaign

Advertisment

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் இந்த நிலையில் நாடு முழுவதும் கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கியுயள்ளன. அந்த வகையில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய பிரதமர் மோடி வரும் 8 ஆம் தேதி தமிழகம் வருவதாக இருந்தது. இந்நிலையில் தற்போது அந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வரும் 8 ஆம் தேதிக்கு பதிலாக 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில், பிரதமர் மோடி, தமிழகம் வருகிறார். 12 ஆம் தேதி கோவை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அதனை தொடர்ந்து மறுநாள் 13 ம் தேதி தேனியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவார்என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.