ajit sharma

இந்தியாவில் ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ தடுப்பூசிகளுக்கு அவசரகாலபயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்தியாவில், மிகப்பெரிய தடுப்பூசி செலுத்தும் திட்டம் விரைவில் தொடங்க இருப்பதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் பீகார் காங்கிரஸ் தலைவர் அஜித் சர்மா, முதல் தடுப்பூசியைப் பிரதமர் மோடி செலுத்திக்கொண்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாகஅவர்,"புதிய ஆண்டில் இரண்டு தடுப்பூசிகள் கிடைத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், ஆனால் இதுகுறித்து மக்களிடையே சந்தேகம் உள்ளது. இந்த சந்தேகத்தை நீக்கும்வகையில் ரஷ்யாவிலும் அமெரிக்காவிலும், அந்த நாட்டின்தலைவர்கள் முதல் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடியும், மூத்த பாரதிய ஜனதா தலைவரும்முதலில் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டு மக்களின்நம்பிக்கையை வெல்ல வேண்டும்" எனகூறியுள்ளார்.

Advertisment

மேலும் “இரண்டு தடுப்பூசிகளுக்கும் பெயர் வாங்க பாஜக முயற்சிக்கிறது.ஆனால் கொரோனா வைரஸ் தடுப்பூசியைத் தயாரித்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகிய இரு நிறுவனங்களும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டவை.எனவே மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும் வாழ்த்துகளையும், நற்பெயரையும் வழங்க வேண்டும்" என்று அஜித்சர்மாதெரிவித்துள்ளார்.