நாடு முழுவதும் அரசியல் தலைவர்களின் சிலை உடைக்கப்பட்டு வரும் சூழலில், தற்போது பிரதமர் மோடியின் சிலை மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

Modi

உத்தரப்பிரதேசம் மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தில் உள்ளது பக்வான்பூர் பகுஹாரா கிராமம். இங்குள்ள சிவன் கோவிலில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வைக்கப்பட்ட பிரதமர் மோடியின் சிலையை மர்மநபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். மோடி சிலையின் மூக்குப்பகுதி சேதமடைந்துள்ள நிலையில், எதற்காக, யார் இந்த சிலையை சேதப்படுத்தினார்கள் என்று இதுவரை தெரியவில்லை.

Advertisment

கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில், அந்த கிராமத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் ப்ரஜேந்திரா நாராயண மிஷ்ரா, அங்குள்ள சிவன்கோவிலில் மோடி சிலையை வைத்துள்ளார். தேர்தலுக்கு முன்பாக அந்தப் பகுதி பொதுமக்கள் அனைவரும் மோடி ஜெயிக்கவேண்டும் என வேண்டியதாக ப்ரஜேந்திரா நாராயணாவின் மகன் அலோக் மிஷ்ரா தெரிவித்திருக்கிறார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த தகவல்கள் கிடைக்காத நிலையில், மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Advertisment