மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நேற்று மாலையுடன் முடிந்த நிலையில் நாளை இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இன்று காலை உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு சென்ற மோடி அங்கு பூஜைகள் மேற்கொண்டார். அதன்பிறகு அப்பகுதியில் நடைபெறும் சில வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்ட அவர், தற்போது பாண்டவர்கள் தவம் செய்ததாக கூறப்படும் நதிக்கரையில் உள்ள சிறிய குகைக்குள் சென்று, காவி ஆடை அணிந்து தியானம் செய்து வருகிறார்.
நாளை காலை வரை சுமார் 20 மணிநேரம் அவர் தியானத்தில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தியானத்தை முடித்து விட்டு நாளை மாலை கிளம்பி அவர் டெல்லி செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேதார்நாத் கோவிலில் வழிபடும் புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்டு ஹரஹர மகாதேவ் என பதிவிட்டுள்ளார்.