பிரதமரின் பாதுகாப்புக்கு ஆண்டுக்கு 600 கோடி ரூபாய் செலவழிக்கப்படுவதாக தற்போது தெரியவந்துள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மரணத்துக்கு பிறகு பிரதமர்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் சிறப்பு பாதுகாப்பு குழு என்று அழைக்கப்படும் எஸ்பிஜி பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டது. இது பிரதமர், முன்னாள் பிரதமர், அவர்களின் குடும்பத்தாருக்கு பாதுகாப்பு அளித்து வந்தது.

Advertisment

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் அந்த விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்தது. அதன்படி இனி பிரதமரின் பாதுகாப்பை மட்டும் எஸ்பிஜி ஏற்கும் என்ற சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்நிலையில் பிரதமரின் பாதுகாப்புக்கு ஆகும் செலவை மத்திய அரசு தற்போது தெரிவித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு பிரதமர் மோடிக்கான பாதுகாப்பு செலவு 600 கோடியாக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு பாதுகாப்பு செலவு 540 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.