வரும் மே 19 ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் அனைத்து கட்சி தலைவர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

modi speech at padaliputra in bihar

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

அந்த வகையில் பீகார் மாநிலம் பாடலிபுத்ராவில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி பொதுமக்களிடையே உணர்ச்சிபூர்வமாக பேசினார். அப்போது பேசிய அவர், "இந்த தேர்தலுக்காக பீகார் மாநிலத்தில் நான் மேற்கொள்ளும் கடைசி பொதுக்கூட்டம் இதுவாகும். ஆனால் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான பின் நான் அறிவித்த வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த கண்டிப்பாக வருவேன்" என கூறியுள்ளார்.

மேலும், "நீங்கள் என்மீது காட்டும் அன்பு வெற்றிக்கான அடையாளமாக எனக்கு தெரிகிறது. இந்த இறுதி காட்ட தேர்தலிலும் எனது வெற்றியை நீங்கள் உறுதிப்படுத்துங்கள்" என உருக்கமாக தெரிவித்தார். பாடலிபுத்திரா பகுதியில் வரும் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.