Advertisment

தாமரை மலர்ந்தே தீரும், அதுவும் எப்படி தெரியுமா..? பிரதமர் மோடி பேச்சு...

ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி 4 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் அங்குள்ள பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி இன்று ஒடிசாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Advertisment

modi speech in odisha election campaign

அப்போது பேசிய அவர், "இந்த தேர்தலில் இந்தியா முழுவதும் தாமரை மலர்ந்தே தீரும். அதுவும் குறைவான வாக்குகளில் இல்லை, மிக அதிக அளவு வாக்குகள் பெற்று தாமரை மலரும். நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பா.ஜ.க. செயல்படுகிறது. நம் நாட்டிற்கு நேர்மையான ஆட்சி வேண்டுமா அல்லது ஊழல் ஆட்சி வேண்டுமா என்பதை மக்களாகிய நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். பாஜக பணத்தினாலோ அல்லது வாரிசு முறையிலோ உருவாக்கப்படவில்லை. தொண்டர்களின் கடுமையான உழைப்பிலும், வியர்வையிலும் உருவானது தான் இந்த பாஜக. இதனால் தான் இன்று நாட்டிலேயே மிகப்பெரிய ஜனநாயக கட்சியாக பா.ஜ.க. விளங்குகிறது" என கூறினார்.

modi loksabha election2019
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe