மகாராஷ்ட்ரா மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அம்மாநில முதலமைச்சர் தேவந்திர பட்னாவிஸ் நடத்திய மகாஜனதேஷ் யாத்ரா எனப்படும் மக்கள் சந்திப்பு பயணத்தின் நிறைவு நிகழ்ச்சி நேற்று நாசிக் நகரில் நடைபெற்றது.

modi speech at maharashtra

Advertisment

Advertisment

இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ ரத்து செய்ததன் மூலம், வன்முறை, பயங்கரவாதம், பிரிவினைவாதம், ஊழல் ஆகியவற்றில் இருந்து ஜம்மு- காஷ்மீர் விடுதலை கிடைத்துள்ளது. மேலும் ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சிப்பாதையில் அடியெடுத்து வைத்துள்ளது. அதேபோல மஹாராஷ்டிராவில் பட்னாவிஸ் சிறப்பாக ஆட்சிசெய்துள்ளார்" என்று பேசினார்.

மேலும் பேசிய அவர், ராமர் கோவில் விவகாரத்தில், சிலர் வாய்க்கு வந்ததை எல்லாம் உளறிவருவதாகவும். அவர்கள் எதற்காக இதுபோல் முட்டாள்தனமாக பேசுகிறார்கள் என்றும் கூறினார். அதேபோல அனைவரும் அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் முடிவை மதித்து நடக்க வேண்டும் என்றும் கூறினார்.