Advertisment

பிரதமர் மோடி பேச்சின் முக்கிய அம்சங்கள்...

நாடு முழுவதும் 73 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்து பொதுமக்களிடையே உரையாற்றினார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள்:

Advertisment

modi speech in independence day

2014- 19 காலகட்டத்தில், மக்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டன. இனி 2019 லிருந்து மக்களின் ஆசைகளையும், கனவுகளையும் நனவாக்குவோம்.

ஜிஎஸ்டி வரி விதிப்பு மூலம் 'ஒரே நாடு ஒரே வரி' என்ற கனவு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

உள்கட்டமைப்புத் துறையில் ரூ.100 லட்சம் கோடி முதலீடு செய்ய முடிவு.

Advertisment

தொழில்புரிய ஏதுவான நாடுகளின் பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் இந்தியாவை கொண்டு வர வழிவகை செய்யப்படும்.

1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உள்ள இந்தியா, அடுத்த 5 ஆண்டுகளில் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக மாறும்.

சுற்றுலாத் துறையின் வளர்ச்சியில் பங்காற்ற 2022 ஆம் ஆண்டிற்குள் மக்கள் ஒவ்வொருவரும் இந்தியாவுக்குள்ளேயே 15 சுற்றுலாத் தலங்களுக்காவது செல்ல வேண்டும்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை அமல்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும்.

சட்டப்பிரிவு 370 நீக்கத்தின் மூலம் ஒரே நாடு ஒரே அரசியல் சட்டம் என்ற எண்ணம் இன்று நனவாகியுள்ளது.

அக்டோபர் 2-ம் தேதி முதல் பிளாஸ்டிக்கைத் தடை செய்வது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

விரைவில் திறந்த வெளியில் மலம் கழிக்காத நாடாக இந்தியா மாறும்.

modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe