ஹரியானா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கிண்டல் செய்யும் வகையில் பேசியுள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
ஹரியானாவில் சோனிபட் பகுதியில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசிய அவர், "சோனிபட் என்றால் ''விவசாயி, இளைஞன், மல்யுத்த வீரர்' என்று அர்த்தம். மல்யுத்தம் போன்ற பல துறைகளில் இந்த பகுதி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் ராணுவ வீரர்களும், விவசாயிகளும் மற்றும் விளையாட்டு வீரர்களும் பாதுகாப்பாக இல்லை. இப்போது அப்படி இல்லை. தூய்மை இந்தியா அல்லது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பற்றி நாம் பேசும்போது காங்கிரசுக்கு வயிற்று வலி வரும், தற்செயலாக யாராவது பாலகோட் என்று சொன்னால் காங்கிரஸ் வலியால் குதிக்கத் தொடங்குகிறது" என்றார். ஹரியானா மாநிலத்தில் வரும் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு இறுதிக்கட்ட பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன.