Advertisment

முதல்கட்ட தேர்தலில் பாஜக அலை வீசியுள்ளது- மோடி

நாடு முழுவதும் 17-வது மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமான இன்று 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. வரும் மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

Advertisment

modi speech at assam ahead of loksabha election

இந்தநிலையில், அசாம் மாநிலம் சில்சாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி, "மக்களவைத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு தற்போது நடந்துள்ளது. நாட்டில் சில பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். இந்த முதல்கட்டத் தேர்தலில் பாஜவுக்கான மக்களின் ஆதரவை என்னால் உணர முடிகிறது. மோடி அரசு மீண்டும் அமையும் என்பதை இந்த ஆதரவு அலை நமக்கு உணர்த்துகின்றன. இந்த அலை அடுத்த கட்டங்களிலும் தொடரும். எதிர்க்கட்சிகளுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. அசாமில் இன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள 5 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி பெரும் வெற்றி பெறுவது உறுதி. இனி எதிர்க்கட்சிகளுக்கு எந்த வாய்ப்பும் இல்லை" என கூறியுள்ளார்.

Advertisment

loksabha election2019 modi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe