பிரதமர் மோடி இன்று 10 மாநில முதல்வர்களுடன்கரோனா தடுப்புமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும்கலந்து கொண்டார். இந்த கூட்டத்தின் முடிவுக்கு பிறகு கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி பேசுகையில்,
நாட்டில்80% கரோனா தொற்று10 மாநிலங்களில் உள்ளது. ஒவ்வொரு மாநிலமும் கரோனாவிற்கு எதிராகபோராடி வருகிறது. பீகார், உத்திரபிரதேசம்,குஜராத், மேற்கு வங்கம், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள்பரிசோதனைகளை அதிகரிக்கவேண்டும். இறப்பு குறைந்து குணமடைந்தோர் விகிதம்அதிகரிப்பது நம் சரி நாம் சரியான பாதையில் செல்வதை காட்டுகிறது. கரோனா பணியில்ஒவ்வொரு மாநிலத்தின் பங்கும் மிகவும் முக்கியமானது என்றார்.