Advertisment

''கரோனாவிலிருந்து மீளும் நாடாக இந்தியா...''- ஐ.நா.வின் உயர்நிலைக் கூட்டத்தில் மோடி உரை!!

modi speech

Advertisment

பிரதமர் மோடி ஐநாவின் உயர்நிலைக் கூட்டத்தில் உரையாற்றினார். அவர் உரை பின்வருமாறு,

“சுகாதாரத்துறை சிறப்பாக செயல்படுவதால் குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நெகிழி பயன்பாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகளையும் எங்கள் அரசு எடுத்துள்ளது.கடந்த ஆறு ஆண்டுகளில் 40 கோடி வங்கி கணக்குகளை தொடங்கி வைத்துள்ளோம்.அதில் 22 கோடி பெண்கள் அடங்குவர்.குடிமக்கள் அனைவருக்கும்வீடு கட்டித்தரும் திட்டத்தை 2022க்குள் நிறைவேற்ற எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது.இந்தியாவின் சுகாதார முறைகள் பிற உலக நாடுகளில்இருப்பதை விட சிறப்பாக உள்ளது.

கரோனாவுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றி இருக்கிறோம். அமைதி மற்றும் நிலையான வளர்ச்சி பாதை மீது இந்திய ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளது.இரண்டாம் உலக போருக்கு பின்னர் அமைதியை நிலைநாட்ட ஐ.நா.வின் பிறப்பு தோன்றியது. தற்போது கரோனாவுக்கு எதிரான போருக்காகஐ.நா. சீர்திருத்தங்களுடன் மறு பிறப்பு எடுத்துள்ளது. கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் 150 மேற்பட்ட நாடுகளுக்கு மருத்துவம் மற்றும் பிறஉதவிகளை வழங்கி வருகிறோம்.

Advertisment

முக்கியமான தருணத்தில் ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியா இடம் பிடித்திருக்கிறது. ஆறுலட்சம் கிராமங்களில் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தி, 11 கோடி வீடுகளுக்கு கழிவறை கட்டிக் கொடுத்து உள்ளோம். இந்தியாவின் வாழ்வாதார திட்டங்களில்,சுயஉதவி குழுக்களை சேர்ந்த ஏழு கோடிப் பெண்கள் கரம் கொடுத்துள்ளனர்.சுயஉதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் மூலம் பலரது வாழ்க்கையில் மிக பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.மாநில அரசுகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் முக்கிய பிரதிநிதிகள் அங்கம் வகித்து நாட்டின் வளர்ச்சிக்கு கை கொடுத்து உள்ளனர்.உலக அளவில் கரோனாவிலிருந்துமீளும்நாடுகளில் இந்தியா முன்னேறி வருகிறது.

corona virus India modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe