தில்லியில் நடைபெற்ற சி.ஐ.ஐ. ஆண்டு கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அதில், "கரோனா பாதிப்பு மக்களைக் கஷ்டப்படுத்தி வருகின்றது. அதிலிருந்து மக்களைக் காக்க வேண்டும். அதே நேரத்தில் பொருளாதாரத்தையும் நாம் வலுப்படுத்தியாக வேண்டும். கரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்டெடுக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பமாக இருக்கின்றது.
கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா நல்ல முறையில் சென்றுகொண்டிருக்கின்றது. அரசின் திட்டங்கள் ஏழை எளிய மக்களுக்குப் பெரிய அளவில் உதவியாக இருக்கின்றது. made in india பொருட்கள் உலகம் முழுவதும் பிரபலமாக வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாக இருக்கின்றது" என்றும் அவர் பேசினார்.