modi

நேற்று நடந்த காங்கிரஸ் பிரச்சார கூட்டம் ஒன்றில் ராஜ்பாப்பர் பேசுகையில், இந்திய ரூபாயின் மதிப்பு பிரதமர் மோடியின் தாயாரின் வயதை தொடும் அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது என்று விமர்சனம் செய்தார்.

Advertisment

இந்த விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில் மபியிலுள்ள சதார்பூர் என்ற இடத்தில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய மோடி, ”பாஜகவின் நல்ல பணிகளால் காங்கிறஸுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 18 வருடமாக காங்கிரஸை தொற்கடித்து கொண்டே வருகிறேன். அதனால் இன்று தேர்தல் அரசியலில் எனது தாயை இழுக்க வேண்டிய அவசியத்திற்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது. என்னை எதிர்த்து போராட முடியாததால், என் தாயை காங்கிரஸ் விமர்சிக்கிறது. எனது தாயை விமர்சனம் செய்தவர்களுக்கு மபி மக்கள் இந்த தேர்தலில் சரியான பாடம் அளிப்பார்கள். ஊழல் மற்றும் முறைகேடு காங்கிரசின் கலாசாரமாக உள்ளது. முறைகேடு வழக்குகளில் ஜாமினில் வெளிவந்தவர்கள் தற்போது பதற்றமடைந்துள்ளனர்” என்றார்.