Advertisment

மோடியிடம் இருந்து ’சிபிஐ’யை காப்பாற்றுங்கள்....ட்விட்டரில் ட்ரெண்ட்...

modi se cbi

டெல்லியில் சிபிஐ இயக்குனருக்கு கட்டாய விடுமுறை தந்ததை எதிர்த்து இன்று கண்டன பேரணி ராகுல் காந்தி தலைமையில் நடந்தது. சிபிஐ தலைமை அலுவலகம் நோக்கி வந்த பேரணியை போலிஸார் தண்ணீர் பீய்ச்சி தடுத்தனர். அதை மீறியும் போராட்டம் நடைபெற்றதால் அங்கிருந்த அனைவரையும் கைது செய்தனர். பேரணியை நடத்திய ராகுல் காந்தியையும் கைது செய்து, போலிஸ் வேனில் ஏற்றினர்.

Advertisment

பின்னர், அருகிலுள்ள லோதி காலணி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.

Advertisment

இந்நிலையில் ட்விட்டரில்,’ மோடியிடம் இருந்து சிபிஐயை காப்பாற்றுங்கள்’(#ModiSeCBIBacho) என்று ஹேஸ்டேக் ட்விட்டரில் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது. இதற்கு முன்னர் மோடி ஒரு திருடர் என்று ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.

Rahul gandhi modi twitter
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe