
இந்தியப் பிரதமர் மோடி, 2021 ஆம் ஆண்டின்கடல்சார் உச்சிமாநாட்டை இன்று தொடங்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்வில், 'மரைடைம் இந்தியா விஷன் 2030' என்ற புத்தகத்தை வெளியிட்டதோடு, சாகர் மந்தன்-மெர்கன்டைல் மரைடைம் டொமைன் விழிப்புணர்வு மையத்தையும் திறந்து வைத்தார்.
அதன்பிறகு கடல்சார் உச்சி மாநாட்டில்உரையாற்றியவர், 2030 ஆம் ஆண்டிற்குள்23 நீர் வழிகளை இயக்கஇலக்கு நிர்ணயித்துள்ளதாகக் கூறியுள்ளார். கடல்சார் மாநாட்டில்பிரதமர் மோடி ஆற்றியஉரை வருமாறு:
இந்த உச்சிமாநாடு,இந்தத் துறை தொடர்பான பல பங்குதாரர்களை ஒன்று சேர்க்கிறது. கடல்சார் பொருளாதாரத்தை உயர்த்துவதில் நாம் பெரும் வெற்றியை அடைவோம் என்று உறுதியாக நம்புகிறேன். இந்த துறையில் இந்தியா இயற்கையாகவே ஒரு தலைவர். நம் தேசத்திற்கு வளமான கடல் வரலாறு உள்ளது. இந்த உச்சிமாநாட்டின் மூலம், இந்தியாவுக்கு வந்து எங்கள் வளர்ச்சிப் பாதையில் ஒரு பகுதியாக இருக்க, உலக நாடுகளைஅழைக்க விரும்புகிறேன். கடல்சார் துறையில் வளர்வதிலும், உலகின் முன்னணி நீலப் பொருளாதாரமாக உருவெடுப்பதிலும் இந்தியா மிகவும் நம்பிக்கையாக உள்ளது.
இதற்கு முன்பு பார்த்திராத வகையில், எங்கள் அரசு நீர்வழிகளில் முதலீடு செய்கிறது. உள்நாட்டு நீர்வழிகள், சரக்குகளைக் கொண்டு செல்வதற்கான செலவு குறைந்த, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வழி எனக் கண்டறியப்பட்டுள்ளது. 2030-க்குள் 23 நீர்வழிகளை இயக்க இலக்கு வைத்துள்ளோம்.இந்தியா, அதன் பரந்த கடற்கரையோரம் 189 கலங்கரை விளக்கங்களைக் கொண்டுள்ளது. 78 கலங்கரை விளக்கங்களை ஒட்டியுள்ள நிலத்தில், சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான திட்டத்தை நாங்கள் வகுத்துள்ளோம்.
இவ்வாறு மோடி உரை நிகழ்த்தினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)