பகத் சிங்கிற்கு பிரதமர் மோடி புகழாரம்!

Narendra Modi

இந்தியச் சுதந்திரப்போராட்ட வீரரான பகத் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் மோடி அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையான பகத் சிங்கின் 113-வது பிறந்த தினம் இந்தியா முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. காலை முதலே பலர் இது குறித்தான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அரசியல் தலைவர்கள், முக்கியப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் பகத் சிங்கை நினைவு கூர்ந்தனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகத் சிங் பிறந்த தினம் குறித்தான வாழ்த்துப் பதிவினை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், "அமரர் பகத் சிங் பாரதமாதாவின் தவப்புதல்வர். அவர் பிறந்த இந்நன்னாளில் அவரை நினைவு கூறுவோம். வீரம் மற்றும் துணிச்சலின் உதாரணமான அவரது வரலாறு நாட்டு மக்களுக்கு உத்வேகம் அளிக்கும்" எனப் பதிவிட்டுள்ளார்.

Narendra Modi
இதையும் படியுங்கள்
Subscribe