இந்தியா - ஆசியன் மாநாடு தாய்லாந்தில் 3ஆம்தேதி நடைபெறுகிறது. மேலும் 14வது கிழக்கு ஆசிய உச்சிமாநாடும் தாய்லாந்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இன்று தாய்லாந்து தலைநகர் பாங்காக் புறப்பட்டுகிறார்.
இந்த பயணத்தின்போது பாங்காக் தேசிய உள்விளையாட்டு அரங்கில் இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். மேலும் அந்த நிகழ்ச்சியில் இரண்டு சிறப்புகளை மோடி செய்ய இருக்கிறார். அதில் ஒன்று குருநானக்கின் 550வது பிறந்தநாள் நினைவாக சிறப்பு நாணயம் ஒன்றை பிரதமர் மோடி வெளியிடுகிறார். இரண்டாவதாக தாய்லாந்து மொழியான ‘தாய்’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை பிரதமர் வெளியிடுகிறார். இதன்பின் இந்தியா - ஆசியன் மாநாட்டில் கலந்துகொண்டு மற்ற நாடுகளின் தலைவர்களை சந்திக்கிறார்.