Advertisment

பிரதமர் மோடியின் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம்...

நாடு முழுவதும் இன்று ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் ராக்கி கயிறுகளை கட்டி மகிழ்ந்தனர்.

Advertisment

modi raksha bandhan celebrations

சகோதர, சகோதரிகளுக்கு இடையேயான பாசத்தை பறைசாற்றும் விதமாக கொண்டாடப்படும் இந்த விழா இன்று நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சகோதரத்துவத்தை போற்றும் விதமான இந்த விழா டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்திலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் குழந்தைகள், பள்ளி மாணவர்கள் முதல் வயதானவர்கள் என பலரும் பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்டினர். மேலும் மாற்றுத்திறனாளிகளும் பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்ட அவரது இல்லத்துக்கு வந்திருந்தனர். அப்போது மோடி அவர்கள் அருகில் எழுந்து சென்று ராக்கி கட்டிக்கொண்டார்.

Advertisment

Raksha Bandhan modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe