ராஜபக்சே உடனான ஆலோசனையில் தமிழர்கள் குறித்த பிரதமரின் பேச்சு...

modi rajapakse discusses about tamil people

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சேவுடன் இந்தியப் பிரதமர் மோடி இன்று காணொளிக்காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார்.

இந்தியா - இலங்கை இடையேயான உச்சி மாநாடு இன்று காணொளிக்காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில் இருநாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்துவது தொடர்பாக, இருநாட்டு பிரதமர்களும் ஆலோசனை மேற்கொண்டனர். இலங்கை பிரதமராக ராஜபக்சே மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்துவது இதுதான் முதல் தடவையாகும்.

இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "இந்தியா - இலங்கை இடையேயான உறவுகள் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. அண்டை நாட்டுக்கு முதல் முன்னுரிமை என்ற கொள்கையின் படியும் பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஆகிய கோட்பாட்டின் படியும் எங்கள் அரசு, இலங்கை அரசுடனான உறவுக்குச் சிறப்பு முன்னுரிமை அளிக்கிறது" எனத் தெரிவித்தார். மேலும், இந்தப் பேச்சுவார்த்தையின் போது இலங்கை அரசு சிறுபான்மையினரான தமிழர்களுக்கும் அதிகாரப்பகிர்வு அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார் என்றும் சமத்துவம், நீதி, அமைதி, கவுரவம் ஆகியவற்றை எதிர்பார்க்கும் தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் அமைதி மற்றும் சமாதானத்துக்கான பேச்சை முன்னெடுக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Rajapaksa srilanka
இதையும் படியுங்கள்
Subscribe