
அதிவேக இணைய வசதியை வழங்கவுள்ள 5ஜி தொழில்நுட்பம், இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதற்காக, டெல்லியில் பிரகதி மைதானத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடி 5ஜி தொழில்நுட்பத்தை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
முதலில் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5 ஜி அமலுக்கு வர இருக்கிறது. இரண்டு ஆண்டு காலத்திற்கு பின் 5 ஜி நாடு முழுவதும் அமலுக்கு வர இருக்கிறது. இந்நிலையில் தற்பொழுது பிரகதி மைதானத்திற்கு வந்திருக்கும் மோடி அங்குள்ள அரங்குகளை பார்வையிட்டு வருகிறார். இன்னும் சற்று நேரத்தில் 5ஜி சேவை துவங்குவதற்கானநிகழ்ச்சி தொடங்க இருக்கிறது.
Follow Us