Advertisment

சிங்கமும், மோடியும்; புகைப்படம் சொல்வது என்ன..? இணையத்தில் பேசுபொருளான புகைப்படம்...

பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் மரத்தின் மீது சிங்கம் ஒன்று தனியாக நின்றிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

Advertisment

lion

பிரதமர் மோடி வழக்கமாக ட்விட்டரில் ஆக்டிவாக இருப்பவர். ஆனால் அவர் டதற்போது வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படபாம் பல்வேறு ஊகங்களை இணையதளவாசிகளிடம் ஏற்படுத்தி வருகிறது. குஜராத் மாநிலம் ஜுனாகத் வனப்பகுதியில் உள்ள சரணாலயத்தில் சிங்கம் ஒன்று ஒரு மரத்தின் மீது கம்பீரமாக நிற்கும் புகைப்படத்தை மோடி வெளியிட்டார்.

கிர் வனச்சரகர் தீபக் வாகர் என்பவர் எடுத்த இந்த புகைப்படத்தை வெளியிட்ட மோடி, ‘கம்பீரமான கிர் சிங்கம், அழகான படம்’ என்று குறிப்பிட்டுள்ளார். சாதாரண இந்த புகைப்படம் தற்போது ட்விட்டரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

பொதுவாக புகைப்படக் கலையில் மோடி ஆர்வம் உள்ளவராக இருக்கிறார். அதனால்தான் அழகான இந்த படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், மக்களவை தேர்தலில் பாஜக -வை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சியினரும் ஒரே அணியில் இனைந்துள்ளனர். அவர்களை தனி ஆளாக நின்று சமாளிப்பேன் என்று மோடி மறைமுகமாகக் கூறுவது போல் உள்ளது என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

பிரதமர் மோடியின் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியள்ளது.

loksabha election2019 modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe