2019ஆம் ஆண்டுக்கான பெட்ரோடெக் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, உலக பொருளாதாரத்தில் இந்தியா ஆறாவது இடத்தை பெற்றிருக்கிறது. ஒரு அறிக்கையின்படி, 2030ஆம் ஆண்டில் உலக பொருளாதாரத்தில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதேபோல இந்தியாதான் அதிகம் எரிசக்தி பயன்படுத்தும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆண்டுக்காண்டு எரிசக்தி பயன்பாட்டில் 5% எரிசக்தி தேவையும் இந்தியாவிற்கு இருக்கிறது. எரிசக்தியின் தேவை இந்தியாவுக்கு 2040ல் தற்போதைவிட இரட்டிப்பான தேவை இருக்கும் என்பதால் எரிசக்தி நிறுவனங்களுக்கு இந்திய சந்தை மிகவும் ஈர்ப்புடையதாக இருக்கும் என்று கூறினார்.