Modi pays last respects to Ram Vilas Paswan

மத்திய அமைச்சரும், எல்.ஜே.பி. தலைவருமான ராம்விலாஸ் பஸ்வானுக்குபிரதமர் நரேந்திர மோடி நேரில் இறுதி மரியாதை செலுத்தினார்.

Advertisment

மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். டெல்லி மருத்துவமனையில் மூன்று நாட்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில் ராம்விலாஸ் பஸ்வான் நேற்று இரவு 8 மணி அளவில் காலமானார். பீகார் சட்டசபைதேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இவரின் இறப்பு அங்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ராம்விலாஸ் பஸ்வானின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Advertisment

ராம்விலாஸ் பஸ்வான் இறப்பையொட்டி பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தியில், "என்னுடைய நீண்ட கால நண்பரை இழந்துவிட்டேன்" என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.