பிரதமர் மோடி பள்ளி மாணவர்கள் உடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி டெல்லியில் நடந்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில், அதுகுறித்த பயத்தை போக்கும் விதமாக பிரதமர் மோடி மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஆண்டு தோறும் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், இந்த ஆண்டிற்கான நிகழ்ச்சிக்காக டெல்லியில் இருந்து நாடு முழுவதும் உள்ள மாணவர்களோடு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

Advertisment

modi at ParikshaPeCharcha 2020

இதில் பேசிய பிரதமர் மோடி, "உங்களுடைய இதயத்தை தொட்ட நிகழ்ச்சி எது என என்னிடம் யாரேனும் கேட்டால் இந்த நிகழ்ச்சியைதான் சொல்வேன். மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிகளில், அவர்களோடு சேர்ந்து கற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பை இளம் வயதினர் எனக்கு கொடுத்திருக்கிறார்கள்" என தெரிவித்தார். மேலும் பேசிய மோடி, "சந்திராயன் 2 திட்டம் தோல்வியடைந்தபோது நானும் கவலை அடைந்தேன். ஆனால், பின்னர் விஞ்ஞானிகளுடன் சென்று பேசி, அவர்களை ஊக்கப்படுத்தினேன். தோல்விகளில் இருந்துதான் வெற்றிக்கான பாடத்தை கண்டறியவேண்டும்" என தெரிவித்தார்.