ரஃபேல் விமானத்தின் உண்மையான விலையை பிரதமர் நரேந்திர மோடியும், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தெரிவிக்காமல் தவறான தகவலை தெரிவிப்பதாக ராகுல் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், பாதுகாப்பு விஷயத்திற்காகவே ரஃபேல் போர் விமானம் பற்றியான தகவல்களை வெளியிடக்கூடாது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
தற்போது இதுகுறித்து கலாய்க்கும் விதத்தில் ராகுல் காந்தி ட்விட்டரில்," 2014 ஆம் ஆண்டிலிருந்து நான்கு பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாறிவிட்டனர். இருந்தாலும் பிரதமர் மோடியே தனிப்பட்ட முறையில் ரஃபேல் விமானத்தை பற்றி பிரான்ஸில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.அதனால் தான் மோடியை தவிர, நான்கு பாதுகாப்பு மந்திரிகளுக்கும் இதைப்பற்றி தெரியவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.