
பாஜகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி, வெளியுறவுத்துறை அமைச்சர் அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமர் மோடி ஆகிய மூவரையும் விமர்சிக்கும் வகையில் ட்விட்டர் பதிவு ஒன்றனை வெளியிட்டிருந்தார்.
இந்த பதிவின் கீழ் ஒருவர், "நீங்கள் விரும்பிய அமைச்சர் பதவியை அவர்(மோடி) உங்களுக்கு வழங்காததால், நீங்கள் மோடிக்கு எதிரானவராக இருப்பது போல் தெரிகிறது" என கமெண்ட் செய்திருந்தார்.
இதற்கு பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி, "பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில், நான் மோடியின் கொள்கைகளுக்கு எதிரானவன். அது குறித்து எந்தப் பொறுப்பாளருடனும் விவாதிக்க தயாராக இருக்கிறேன். பங்கேற்பு ஜனநாயகம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மோடி இந்தியாவின் அரசர் அல்ல" என பதிலளித்துள்ளார்.