Advertisment

"அன்பான, கலகலப்பான நபர் அவர்" - பிரதமர் மோடி இரங்கல்...

modi mourns rishi kapoor

பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் மறைவிற்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisment

பழம்பெரும் ஹிந்தி நடிகரான ராஜ் கபூரின் இரண்டாவது மகனும், நடிகர் ரன்பிர் கபூரின் தந்தையுமான நடிகர் ரிஷி கபூர் கடந்த 2018- ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் கடந்த ஒரு வருடமாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

Advertisment

இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் அவர் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார். பின்னர் மும்பையில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்த 67 வயதான ரிஷி கபூருக்கு நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, அவர் உடனடியாக மும்பையில் உள்ள ஹெச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரின் மறைவுக்கு திரையுலகபிரபலங்கள், அரசியல்வாதிகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "பன்முகத்தன்மை கொண்ட, அன்பான மற்றும் கலகலப்பான நபர் ரிஷி கபூர். அவர் திறமையின் ஊற்றாக இருந்தார். சமூக ஊடகங்களில் கூட எங்கள் தொடர்புகளை நான் அடிக்கடி நினைவு கூர்வேன். திரைப்படத்துறை மற்றும் இந்தியாவின் வளர்ச்சி ஆகியவை குறித்து அவர் ஆர்வமாக இருப்பார். அவரது மறைவு துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கல்" எனத் தெரிவித்துள்ளார்.

modi rishi kapoor
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe