Advertisment

"அவர்களின் வீரம் மற்றும் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது" - பிரதமர் மோடி இரங்கல்...

modi mourns to expired indian army soldiers

Advertisment

பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் உயிர்நீத்த இந்திய ராணுவ வீரர்களுக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஹந்த்வாராவில் ஊடுருவிய பயங்கரவாதிகளுக்கும் - ராணுவப் படையினருக்கும் இடையே சுமார் எட்டு மணிநேரம் நடந்த துப்பாக்கிச்சண்டையில், ராணுவத் தளபதி உள்ளிட்ட நான்கு வீரர்கள் மற்றும் காஷ்மீர் உதவி ஆய்வாளர் ஒருவர் என ஐந்து பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும், இந்தச்துப்பாக்கிச்சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இந்தச் சண்டையில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதையைச் செலுத்தும் விதமாகப் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதில், "ஹந்த்வாராவில் தியாகியாகிய எங்கள் தைரியமான வீரர்கள் மற்றும் பாதுகாப்பு வீரர்களுக்கு எனது அஞ்சலி. அவர்களின் வீரம் மற்றும் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது. அவர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் தேசத்திற்குச் சேவை செய்ததோடு, நமது குடிமக்களைப் பாதுகாக்க அயராது உழைத்தனர். அவர்களது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கல்" எனத் தெரிவித்துள்ளார்.

jammu and kashmir modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe