Skip to main content

குஜராத் தடுப்பணைக்கு மோடியின் தாயார் பெயர்?

 

modi mother name in barricade 

 

குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள ரைசன் பகுதியில் வசித்து வந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், வயது மூப்பு காரணமாகத் தனது 100 வது வயதில் சிகிச்சை பலனின்றி சமீபத்தில் காலமானார்.

 

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் அருகே உள்ள நாயரி ஆற்றின் குறுக்கே 15 லட்சம் செலவில் தடுப்பணை ஒன்று கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த தடுப்பணையானது 400 அடி  நீளமும், 150 அடி அகலமும் கொண்டதாக அமைய உள்ளது. மேலும் இதன் மூலம் சுமார் 2.5 கோடி லிட்டர் தண்ணீரை சேமித்து வைக்க முடியும். இதனால் அருகில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் கால்நடைகள் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதில் கலந்து கொண்ட அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கும் போது, "இந்த  தடுப்பணைக்கு மோடியின் தாயார் ஹீராபென்க்கு மரியாதை செலுத்தும் விதமாக பெயர் சூட்டப்பட வாய்ப்பு உள்ளதாக என தகவல்கள் தெரிவிக்கின்றன" என கூறினார்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !