இது கூட தெரியாதா..? மோடியை கலாய்த்து தள்ளிய இணையதளவாசிகள்...

பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் பிரதமர் மோடியின் முக்கிய யோசனை குறித்து இணையதளவாசிகள் கலாய்த்து வருகின்றனர்.

modi mocked by netizensfor his comment over balkot attack and radar technology

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் சுமார் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் இது குறித்து பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது பதிவிட்ட ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தானின் பால்கோட் தாக்குதலின்போது, இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் ராடாரில் இருந்து தப்பித்து வருவதற்கு மேகங்கள் உதவின என மோடி ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டியில் கூறினார். மேலும் அதற்கான யோசனையையும் தான் அளித்ததாக கூறினார். அவரின் இந்த பேச்சை பாஜக தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து.

அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியதாக , "திடீரென காலநிலை மோசமாகி, மேகங்கள் சூழ்ந்தன. மழை பெய்யும் நிலை இருந்தது.இதனால் தாக்குதல் நடத்த முடியுமா என சந்தேகம் ஏற்பட்டது. காலநிலையை காரணம் காட்டி தாக்குதலை ஒத்திவைக்க கோரினார்கள். தேதியை மாற்றினால் இரு விஷயங்கள் பிரச்சினையாகும் என்று எனக்கு உணர்த்தின. ஒன்று ரகசியம், இரண்டாவது. ஏராளமான மேகக்கூட்டமும் மழையும் பெய்து வருகிறது. அது நமக்கு உதவும் என்று என்னுடைய அறிவுக்கு உணர்த்தியது. பாகிஸ்தான் ராடாரில் இருந்து நமது விமானங்கள் தப்பிக்க மேகக்கூட்டங்கள் இருந்தன. ஆதலால் தாமதிக்காமல் புறப்படுங்கள் என்று கூறினேன்" என மோடி பேசியதை பதிவிட்டது.

இதனையடுத்து ரேடார் அடிப்படையை தத்துவம் கூட தெரியாதவராக நமது பிரதமர் இருக்கிறார். ரேடார் என்பது ரேடியோ கதிர்வீச்சால் செயல்படக்கூடியது. மேகக்கூட்டங்களால் ரேடியோகதிர்வீச்சை ஒருபோதும் தடுக்க முடியாது. ஒரு நாட்டின் பிரதமருக்கு இது கூட தெரியவில்லை என்றால் நாட்டின் பாதுகாப்பு எப்படி இருக்கும் என ஒரு சிலர் சீரியஸாகவும், அவரின் இந்த கருத்தை கலாய்த்தும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

modi pulwama attack
இதையும் படியுங்கள்
Subscribe