சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுவின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்கிற அச்சத்தில் எல்லோரும் உள்ளனர். இதுமட்டும் அல்லாது வருகின்ற நவம்பர் 4 அடுத்து இந்தியா ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யக்கூடாது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இந்த நெருக்கடிக் காரணமாக இந்தியாவில் எண்ணெய், எரிவாயு ஆய்வில் ஈடுபடுவதற்கும், இவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக முதலீடுகளை ஈர்ப்பதற்கும் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுவதாக இருந்த ஆலோசனை கூட்டம் டெல்லியில் தற்போது தொடங்கியுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் பிரதமர் மோடி எண்ணெய் அதிபர்களுடன் ஆலோசனை கூட்டம் வைப்பது இது மூன்றாவது முறை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.